Wednesday, 24 December 2014

அம்மா ....

பொய் சொல்ல மாட்டார்
என் அம்மா
என்ற
பொய்யை காப்பாற்ற
மீண்டும் ....
உண்மை சொல்லப் பழகுகிறேன்.

எல்லாம் தெரிந்தவர்
என் அம்மா
என்ற
நம்பிக்கையை காப்பாற்ற
மீண்டும் ....
விரிக்க ஆரம்பிக்கிறேன்
கண்களோடு
காதுகளையும் ....

இடி,மின்னல்
அதிர்வின் நடுக்கத்தில்
இறுக்கி அணைத்து,
என் பயத்தை
ஒளித்துவைக்கப்பழகுகிறேன்.

இப்படியாக.....
சுற்றத்தின்
இறுக்கத்தில்
சுருங்கிப்போன சிறகுகளை
மெல்ல..மெல்ல...
மீட்டுத்தந்தாள்
என் மகளாய் பிறந்த
என்
அம்மா ....

Sunday, 14 December 2014

எழுத்து

கண்ணுக்கு வெளியே
உள்ள
கனவுகள் கட்டளையிட்டுக்கொண்டிருக்க..
மனதுக்குள்ளே
மரணிக்கப்பட்ட
கனவுகள்  என்னுடையவை.

வானுக்கும்
வெளிக்கும்
இடையே சில

அந்தரத்தில்
திரிசங்குவை தேடிக்கொண்டு ...

பணம் மட்டுமே
வெளிச்சம்
பாய்சசுவதால்
பிணம்போல் பலர்
பிழைத்துக்கிடக்கின்றனர்.

வாழும்போது
வாழ்க்கையை விரட்டி ...
வீழூம்போது
?
மட்டுமே
கேலி செய்து நிற்கிறது.

என்ன செய்ய...
எழுத்தாணி எழுந்து நிற்கிறது .
தலை(எழுத்து)
என்னவோ
ஆணிக்கடியே சிக்கிய
தவளை போல...

ர்........

உணவுக்கும்
உணர்வுக்கும்
இடையில் சிக்கிக்கொண்ட
"ர் "
சிறிதாகிக் கொண்டே...

எனக்கும்
என்னுடையதற்கும்
இடையே
ஓர்
மெல்லிய கோடு
தடித்துக்கொண்டே...



Friday, 28 November 2014

ம்மம்மம

இரவின் இருளில்.,
பகலின் நீளத்தில் ,
அமைதியின் மெளனத்தில,
தேடிக்கொண்டே. இருக்கிறேன்
என்க்கும். உனக்கும்
நடுவே
தொலைக்க்ப்பட்ட
வினாடிகளை

கிடைத்திடுமோ என்று சில நேரமும் .
கிடைத்தே விடுமோ !
என்று பல
நேரமும் .
பேசப்பட்ட வினாடிகளை விட
பேசப்படாத
வினாடிகளில்
நிறைய அன்பு
வெளிப்பட்டு விடுகிறது.
எனக்கும் உனக்குமான
உறவை
எங்ஙனம் விளக்குவது .
கண் மூடி கிடக்கையில் கூட
கண்ணுக்குள்
விரவிக் கொள்கிராய் .
உறக்கம் விரட்டிக் கொல்கிறாய் .
மேலெழும் மேகமென
மெல்ல வருகிறாய் .
மெல்ல கொல்கிராய் .
எங்கோ செல்கிறாய்.
எப்படியோ வருகிறாய் .
என்னதான் எண்ணம்
என்னை என்ன செய்வதுதான்
உன் எண்ணம் .
காலை
பேயும் உறங்கும் அதிகாலை .
இரவு
ஊர் அடங்கிய நள்ளிரவு
எந்நேரமும் எனை தொடர்வாயோ
எங்கெங்கு சென்றாலும்
தனிமையின்
சுவடை தொலைக்கச் செய்கிறாய் .
தனிமை என்னை
தொலைக்கச் செய்கிறாய் .
நீ புரியாத புதிரும்
இல்லை .
புலனாகா எதிரியும்
இல்லை .
என் செய்வது உன்னை.
எங்கு ஒளித்து
வைப்பது .
இரவில் கொஞ்சம் தொலைந்து
போகிரேனே .
என்னை விட்டு விட்டுப் போ
என் கனவே.
இன்று
ஒரு நாளேனும் .
உறங்கி விட்டுப் போகிறேன்

Wednesday, 26 November 2014

தயக்கம் ஒன்றே
தடுத்துக் கொண்டிருக்கிறது
உன்னையும்
என்னையும்

உன்னிலிருந்து
என்னையும்
என்னிலிருந்து
உன்னையும் .
தயங்கி தயங்கி
தளும்பி தளும்பி
தவறியே விடுமோ
நம். நட்பு